அமெரிக்காவில் ட்ரம்ப் நிர்வாகம் சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தை (USAID) வியத்தகு முறையில் குறைத்து, உலகளாவிய பணியாளர்களில் 10,000க்கும் அதிகமானவர்களில் 294 ஊழியர்களை மட்டுமே தக்கவைத்துக் கொள்ள உள்ளது. அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் அதனால் செலவுகள் கூடுகிறது என்றும் ட்ரம்ப் நிர்வாகம் கூறிவருகிறது.
அரசாங்க மறுசீரமைப்பு முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த நடவடிக்கையை, அதிபர் டொனால்டு ட்ரம்பின் நெருங்கிய கூட்டாளியான தொழிலதிபர் எலான் மஸ்க் வழிநடத்தியுள்ளார். இதனால், சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவன ஊழியர்களை பணிநீக்கம் செய்துவருகிறது. இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தை முடக்க எலான் மஸ்க் திட்டமிட்டு வரும் நிலையில், முடிந்தால் அதை செய்து காட்டுமாறு இந்திய வம்சாவளி டெக் நிறுவனர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் சவால் விட்டுள்ளார். AI நிறுவனங்களைப்போல Perplexity என்பதும் ஒரு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனமாகும். இதன் சிஇஓவாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ் உள்ளார். இவர்தான் தற்போது, USAIDஐ எலான் மஸ்க் முடக்குவதை எதிர்த்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது வலைதளப் பக்கத்தில், “"USAID இலிருந்து டாலர் 500 பில்லியன் திரட்டுவது குறித்து பரிசீலித்து வருகிறோம். நிதி உறுதி செய்யப்பட்டுள்ளது. உங்களால் முடிந்தால் என்னை நிறுத்துங்கள்” என எலான் மஸ்க்கை டேக் செய்து பதிவிட்டுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.