காஸா மோதலை முடிவுக்கு கொண்டு வர ட்ரம்ப் முன்வைத்த புதிய அமைதி திட்டத்தை அரபு நாடுகள் வரவேற்றுள்ளன. இஸ்ரேலும் இந்த ஏற்பாட்டில் திருப்தி தெரிவித்ததாக அவர் கூறுகிறார். ஹமாஸ் மற்றும் பிற கிளர்ச்சிக்குழுக்கள் ஆயுதங்களை கைவிட ஒப்புக்கொண்டாலும், இஸ்ரேல் ராணுவம் காஸாவிலிருந்து முழுமையாக வெளியேற வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்துள்ளன; காசா மக்களின் உயிர் பாதுகாப்பே தங்களின் நோக்கம் எனவும் வலியுறுத்துகின்றன.
காஸாவில் அமைதி ஏற்படுத்த ட்ரம்ப் அறிவித்துள்ள புதிய திட்டத்தை அரபு நாடுகள் வரவேற்றுள்ளன. இஸ்ரேலும் இந்த புதிய ஏற்பாட்டுக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளார். எனினும் ஆயுதத்தை கைவிட தாங்கள் தெரிவித்துள்ள சம்மதம் இஸ்ரேல் படைகள் வெளியேறுவதை பொறுத்தது என்று ஹமாஸ் கூறியுள்ளது.
முன்னதாக காஸாவில் உள்ள ஹமாஸ் மற்றும் பிற கிளர்ச்சிக்குழுக்கள் ஆயுதங்களை கைவிட ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். ஹமாஸ் போர் பாதையிலிருந்து வெளியேறுவதால் காஸா நிர்வாகத்தை பாலஸ்தீனிய குழு ஏற்கும் என்றும் இதைத்தொடர்ந்து இஸ்ரேல் ராணுவமும் அங்கிருந்து வெளியேறும் என்றும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.