உலகம்

கொரோனா கட்டுப்பாடுகள் எதிரொலி... அமெரிக்க தலைநகரை முற்றுகையிட காத்திருக்கும் வாகனங்கள்!

நிவேதா ஜெகராஜா

கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரி, அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி. நோக்கி நூற்றுக்கணக்கான சரக்கு வாகனங்கள் முன்னேறி வருகின்றன.

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக கனடா தலைநகர் ஒட்டாவில், சரக்கு வாகன ஓட்டுநர்கள் மேற்கொண்ட முற்றுகைப் போராட்டம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. அதேபோன்று அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் தொடங்கிய சரக்கு வாகன அணிவகுப்பு தற்போது தலைநகர் வாஷிங்டன் டி.சி.யை நோக்கி முன்னேறி வருகிறது. சரக்கு வாகன ஓட்டுநர்கள் தலைநகருக்குள் செல்ல மாட்டோம் என தெரிவித்தாலும், ஒரு சிலர் கட்டாயம் தலைநகருக்குள் செல்வோம் என கூறி வருகின்றனர். மாஸ்க் மற்றும் தடுப்பூசி கட்டாயம் என்பதை கைவிட வேண்டும் என சரக்கு வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.