நெதர்லாந்தில் குத்துச்சண்டை பாணியில் புதிய கடையின் திறப்பு விழா நடைபெற்றது.
ஹெவி வெயிட் குத்துச்சண்டை சாம்பியனான அந்தோணி ஜோஸ்வா, கடையின் கதவை கையால் உடைத்தார். களத்தில் எதிராளியின் முகத்தில் குத்துவிடுவது போன்று, கண்ணாடியை உடைத்து புதிய பாணியில் கடையை அவர் திறந்து வைத்தார். இந்தக் காட்சியை அங்கு கூடியிருந்த ரசிகர்கள் ஆர்வமுடன் தங்களின் கைப்பேசியில் படம் பிடித்தனர்.