உலகம்

அண்டார்டிகா பனிப்பாறைகளுக்கு கீழே 91 புதிய எரிமலைகள்: ஆய்வு தகவல்

webteam

அண்டார்டிகாவின் பனிப்பாறைகளை உருக்கக் கூடிய 91 புதிய எரிமலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எடின்பர்க் பல்கலைக்கழகத்தினர் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து எடின்பர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகையில், “மேற்கு அண்டார்டிகாவில் 91 புதிய எரிமலைகளைக் கண்டுபிடித்துள்ளோம். அவற்றின் மூலம் எப்போது வேண்டுமானாலும் பனிப்பாறைகளுக்கு பாதிப்பு வரலாம். இது மிக முக்கியமான எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. மேலும், இந்த நூற்றாண்டு பூமியின் தென் துருவத்திற்கு அவ்வளவு சிறப்பானதாக இருக்காது” என்கின்றனர்.

பூமிப்பந்தின் தென்கோடியில் அமைந்துள்ள அண்டார்டிகா முழுவதும் பனிப்பாறைகளைக் கொண்ட கடல் ஆகும். கிரீன்ஹவுஸ் வாயுக்களாலும், வெப்பமயமாகும் கடலாலும் காலநிலை மாற்றம் ஏற்பட்டு துருவப்பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி வருவதாக ஆய்வாளர்கள் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.