உலகம்

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு 

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு 

webteam

2018 மற்றும் 2019 ஆம் ஆண்டின்  இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

2018 ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு போலந்து எழுத்தாளர் ஓல்கா டோகார்ஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 2019 ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஆஸ்திரியாவின் பீட்டர் ஹாண்ட்கேவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2019 இலக்கிய பரிசு பெற்ற பீட்டர் ஹாண்ட்கே தெற்கு ஆஸ்திரியாவின் கோர்ன்டன் பகுதியில் அமைந்துள்ள கிரிஃபென் என்ற கிராமத்தில் 1942 ல் பிறந்தார்.

கடந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவில்லை என்பதால் இந்த ஆண்டு சேர்த்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.