உலகம்

4000 வருடத்துக்கு முந்தைய காதல் ஜோடி கல்லறை: ஆராய்ச்சியாளர்கள் வியப்பு

4000 வருடத்துக்கு முந்தைய காதல் ஜோடி கல்லறை: ஆராய்ச்சியாளர்கள் வியப்பு

webteam

நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய டீன் ஏன் ஜோடி ஒன்றின் கல்லறையை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் முகம் நேருக்கு நேர் இருக்குமாறு புதைக்கப்பட்டுள்ளது.

கஜகஸ்தான் நாட்டின் காரகண்டா மாகாணத்தில் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அப்போது ஒரு பகுதியில் இருந்த கல்லறை ஒன்றை தோண்டினர். அதில் இரண்டு எலும்பு கூடுகள் இருந்தன.

ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு புதைக்கப்பட்டிருந்த அந்த எலும்புக் கூடுகள் ஆராய்ச்சியாளர்களுக்கு வியப்பை தந்தன. அருகில் ஏராளமான தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங் களும் கிடைத்தன.  ஒரு எலும்பு கூட்டின் அருகே வளையல்களும் தங்க மோதிரங்களும் கிடந்தன.

இது, நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் இறந்த 16, 17 வயதுடையவர்களின் கல்லறை என்றும் அவர்கள் காதலர்களாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் எப்படி இறந்திருப் பார்கள் என்பதை இன்னும் ஆய்வு செய்த தொல்லியல் துறையினர் அவர்கள் உயர் குடியை சேர்ந்த வர்களாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். 

அந்த பகுதிகளில் மேலும் ஆராய முடிவு செய்துள்ளனர்.