11 ரூபாய் செலவில் ஆஃப்கானிஸ்தானை சேர்ந்த பெண்ணை இந்தியர் ஒருவர் எளிமையான முறையில் திருமணம் செய்துள்ளார்.
அன்பு மதத்திற்கும், தூரத்திற்கும் அப்பாற்பட்டது என்பதை நிரூபித்துள்ளது இந்த அழகான தம்பதிகளின் திருமணம்.
ஆஃப்கானிஸ்தானை சேர்ந்த நபிஜதா ஃபரீஸ்டா மற்றும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஜாஹித் அலி இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு விமான நிலையத்தில் சந்தித்து பழகியுள்ளனர். பின்னர் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். பெற்றோரிடம் சம்மதம் வாங்கிய இவர்கள், இவர்களது திருமணத்தை ஆடம்பரமாக இன்றி, எளிமையாக நடத்த முடிவு செய்துள்ளனர். இதையடுத்து இவர்களது திருமணம் 11 ரூபாய் செலவில் நடத்தி முடிக்கப்பட்டது. அந்த 11 ரூபாயும் அவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த மதகுருவிற்கு அளிக்கப்பட்டது.