தற்செயலாக நடக்கும் சில நிகழ்வுகளை படம் பிடித்து வைப்பது என்பது எல்லா நேரங்களிலும் முடியாத ஒன்றாக இருக்கும். அப்படி அதி முக்கியமான ஒரு நிகழ்வை க்ளிக் செய்துக் கொண்டால் அதவை விட வேறென்ன மகிழ்ச்சி இருந்துவிட போகிறது.
அதுவும் பெற்றோர்களுடனான மொமன்ட்ஸ்-க்கு வேறு ஆலாபனைகள் கூறவா வேண்டும்? அப்படியான நிகழ்வுதான் ரயில்வேயில் பணியாற்றும் தந்தை மகனுக்கு வாய்த்திருக்கிறது.
ரயில்வேயில் காவலராக தந்தையும், டிக்கெட் பரிசோதகராக (TTE) மகனும் பணியாற்றுகிறார்கள். இருவரது ரயில்களும் இருவேறு துருவங்களை நோக்கி செல்கின்றன. இந்த நிலையில் இருவர் செல்லும் ரயில்களும் அருகருகே செல்லும் போது TTE மகன் தனது ரயில்வே கார்டு (ரயில் மேலாளர்) தந்தையுடன் செல்ஃபி எடுத்துள்ளார்.
இந்த செல்ஃபிதான் இண்டெர்நெட் சென்சேஷனாக மாறியிருக்கிறது. ரயில்வே பணியாளரான தந்தை மகனின் செல்ஃபியை ட்விட்டரில் பகிர்ந்துள்ள சுரேஷ் குமார் என்ற பயனர் , “அற்புதமான செல்ஃபி. இரண்டு ரயில்களும் அருகருகே கடக்கும் போது இந்த செல்ஃபி எடுக்கப்பட்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனை கண்ட இணையவாசிகள், தந்தை மகனின் இந்த அழகான தருணத்தை கண்டு வியந்து கமெண்ட் செய்திருக்கிறார்கள். இதனிடையே இந்த புகைப்படம் போலியானதா அல்லது எந்த ஊரில் எடுக்கப்பட்டது என்ற தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
ஆனால், புகைப்படத்தில் உள்ள ரயிலை காணும்போது வங்க தேசத்தில் எடுக்கப்பட்டதாக இருக்கும் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
ALSO READ: