சூரியக் குடும்பம்
சூரியக் குடும்பம் ட்விட்டர்
உலகம்

சூரியக் குடும்பத்தில் புதிய கிரகம்? ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது என்ன?

Prakash J

சூரியக் குடும்பத்தில் 8 கோள்கள் (புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன்) உள்ளன. எல்லாக் கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. பூமியும் ஒரு கோள்தான். பூமியின் வளிமண்டலத்தில் உயிர்வளி (ஆக்ஸிஜன்) இருப்பதால் பற்பல உயிர்களும் நாமும் வாழ முடிகிறது. பூமியை போன்று உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற கிரகத்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

சூரியக் குடும்பம்

இந்த நிலையில், நெப்டியூன் கோளை தாண்டி பூமியை போன்ற புதிய கிரகத்தை ஜப்பானிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஜப்பானின் கிண்டாய் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி பேட்ரிக் சோபியா லைகாகா (Patryk Sofia Lykawka), ஜப்பானின் தேசிய விண்வெளி கண்காணிப்பு மையத்தை சேர்ந்த தகாஷி இட்டோ (Takashi Ito) ஆகியோர் ஆய்வறிக்கை ஒன்றை வௌியிட்டு தௌிவுபடுத்தியுள்ளனர்.

அவர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ’சூரியக் குடும்பத்தில் நெப்டியூன் கோளுக்கு அடுத்துள்ள பகுதி கைப்பர் பட்டை (Kuiper Belt) என்று அழைக்கப்படுகிறது. இது பனிப்பொருட்களை கொண்ட பகுதி ஆகும். இங்குள்ள குறுங்கோள்கள் தண்ணீர், மீத்தேன், அமோனியாவால் ஆனவை. இந்த கைப்பர் பட்டை பகுதியில் பூமி போன்ற கிரகம் இருக்கிறது. இது எங்களது கணிப்பு மட்டுமே. இதுதொடர்பாக மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியம். சூரிய குடும்பத்தில் 9வது கிரகம் மறைந்திருக்கிறது.

சூரியக் குடும்பம்

அந்த கிரகத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் நீண்டகாலமாக கூறி வருகின்றனர். நாங்கள் கண்டுபிடித்திருப்பது சர்வதேச விஞ்ஞானிகள் கூறி வரும் 9வது கிரகம் கிடையாது. இது வேறு ஒரு புதிய கிரகம் என்று கருதுகிறோம். சூரிய குடும்பத்தின் எல்லையில் இந்த கிரகம் இருக்கிறது. சூரியனில் இருந்து பூமி, 94 வானியல் அலகு தொலைவிலும் சூரியனில் இருந்து புதிய கிரகம் சுமார் 200 வானியல் அலகு தொலைவிலும் இருக்கிறது. இந்த கிரகம் குறித்த ஆய்வுகளை தீவிரப்படுத்த வேண்டும்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.