உலகம்

தாஜ்மகாலை போல 3 மடங்கு பெரியது: பூமியை கடக்கவுள்ள சிறுகோள் - நாசா தகவல்

தாஜ்மகாலை போல 3 மடங்கு பெரியது: பூமியை கடக்கவுள்ள சிறுகோள் - நாசா தகவல்

EllusamyKarthik

வரும் 24ஆம் தேதி அன்று பூமியை மிகப்பெரிய சிறுகோள் ஒன்று கடக்க உள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் அளவு தாஜ் மகாலை போல மூன்று மடங்கு பெரிதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறுகோளுக்கு ‘2008 Go20’ என பெயரிடப்பட்டுள்ளது. 

மணிக்கு 18000 மைல் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறதாம். இந்திய நேரப்படி வரும் 24ஆம் தேதி அன்று நள்ளிரவு 1 மணி அளவில் இந்த சிறுகோள் பூமியை கடக்கும் என நாசா தெரிவித்துள்ளது. இதன் நகர்வை நாசா கண்காணித்து வருகிறது. 

இந்த சிறுகோள் பூமிக்கு எந்தவித சேதத்தையும் ஏற்படுத்தாமல் கடந்து செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சூரிய குடும்பத்தை சுற்றி நிறைய சிறுகோள்கள் சுழன்று வருகின்றன. கோள்கள் உருவாக்கத்திலிருந்து எஞ்சியவையே சிறுகோள்கள் என அறியப்படுகிறது.