பிறவியிலேயே கைக் கால் இல்லாத சிறுவன் ஒருவன் தன் தம்பியின் அழுகையை நிறுத்த வாயில் நிப்பிலை திணிக்கும் காட்சி வைரலாகி வருகிறது.
கடியே வைடன் என்பவர் 22 வயதுள்ள தாய். அவருக்கு இரண்டு பிள்ளைகள். பெரிய பையனுக்கு போயகாம்லியா சைண்ட்ரோம் (phocomelia syndrome) குறைப்பாடு. ஆகவே அவனுக்கு பிறவியிலேயே கைக் கால்கள் இல்லை. மூன்று வயதுச் சிறுவன் இவன். தன் தாய் இல்லாத சமயம் பார்த்து தம்பிப் பாப்பா அழ ஆரம்பிக்க என்ன செய்வது என அறியாமல் தவித்து பிறகு அருமையான யோசனையை கண்டறிகிறான். குழந்தையின் அழுகையை அடக்க உடனே அவன் தன் படுக்கையில் கிடந்த பீடிங் நிப்பிலை தன் வாயால் கவ்வியெடுத்து குழந்தையின் வாயில் திணிக்கிறான். அன்பை பரிமாற்றிக் கொள்ளும் அந்த வீடியோ காட்சி காண்போரை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது. இந்தக் காட்சி இதுவரை இன்ஸ்ட்ராகிராமில் மட்டும் 46 ஆயிரம் முறை பார்க்கப்பட்டுள்ளது.