உலகம்

ஊழியர்களை அலுவலகம் வருமாறு கட்டாயப்படுத்துவது குறுகிய கண்ணோட்டம் கொண்டது - சத்யா நாதெல்லா

EllusamyKarthik

உருமாறிய கொரோனா (டெல்டா வேரியண்ட்) தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் ஊழியர்களை அலுவலகம் வருமாறு கட்டாயப்படுத்துவது குறுகிய கண்ணோட்டம் கொண்டது என மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார். இதனை அவர் ஒரு பேட்டியின் ஊடாக சொல்லியுள்ளார். 

“இந்த சவாலான காலத்தை உலகம் எப்படி கடந்து செல்ல உள்ளது என்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துள்ளேன். இத்தகைய சூழலில் ஊழியர்களை அலுவலகம் வருமாறு எந்த ஒரு நிறுவனமும் கட்டாயப்படுத்துவது குறுகிய கண்ணோட்டத்தில் தான் இருக்க வாய்ப்புள்ளது. 

இந்த சிக்கலை நிறுவனங்கள் களைய வேலை செய்யும் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். அதன் மூலம் தொழிலை எப்படி முன்னெடுத்துச் செல்லலாம் என்பதை குறித்து ஆலோசிக்கலாம்” என அவர் தெரிவித்துள்ளார். 

மைக்ரோசாப்ட் நிறுவனம் முன்னதாக செப்டம்பர் 7 தொடங்கி அக்டோபர் 4 வரையில் அலுவலகங்களை திறக்க திட்டமிட்டிருந்தது. தற்போது அதை முழுவதுமாக ஒத்திவைத்துள்ளது அந்த நிறுவனம்.