அமெரிக்காவின் ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் பார்லர்களில் 6 கொரிய பெண்கள் உட்பட 8 பேரை சுட்டுக் கொன்ற நபர் ஒருபெண் பித்து பிடித்தவர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த செவ்வாய் என்று அமெரிக்காவின் அட்லாண்டா பகுதியில் அமைந்துள்ள மூன்று வெவ்வேறு இடத்தில் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். இதற்கு காரணம் 21 வயது நிரம்பிய ராபர்ட் ஆரோன் லங் என தெரிவிக்கபட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றின் பரவலுக்கு அடுத்ததாக நிறவெறி பேதம் தொடர்பான குற்றங்கள் தலைதூக்கியுள்ளன. குறிப்பாக ஆசிய - அமெரிக்கர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அது தொடர்பாக ஆசிய - அமெரிக்கர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், 6 கொரிய பெண்கள் உட்பட 8 பேரை சுட்டுக் கொன்றவர் பெண் பித்து பிடித்தவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு முடுக்கி விடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் பைடனும் கடந்த ஜனவரியில் இது தொடர்பாக தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.