உலகம்

''போரிங்'' - ட்விட்டரில் பதிவிட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

''போரிங்'' - ட்விட்டரில் பதிவிட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

webteam

தனது ட்விட்டர் பக்கத்தில் போரிங் (Boring) என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார் 

இரண்டாம் உலக போர் முடிவுக்கு வந்த பிறகு அமெரிக்கா தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது. மேலும் பல உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதையும் அமெரிக்கா வழக்கமாக கொண்டுள்ளது. அமெரிக்காவின் ஒவ்வொரு நகர்வும், நடவடிக்கைகளும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் எதிரொளிக்கின்றன. 

சமீப காலமாக அமெரிக்கா-ஈரான் இடையே தற்போது பதட்டமானச் சூழல் நிலவி வருகிறது. 2018ஆம் ஆண்டு ஈரான் உடன் போடப்பட்டிருந்த அணுஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. அத்துடன் ஈரான் மீது பொருளாதாரத் தடையும் விதித்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் அமெரிக்கா-ஈரான் உறவில் விரிசல் ஏற்பட ஆரம்பித்தது. இருநாடுகளுக்கு இடையேயான போர் பதட்டம் மற்ற நாடுகளை பொருளாதார ரீதியில் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது. 

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து உலகமே உற்று நோக்கிவருகிறது. ஆனால் ட்ரம்ப் இன்று காலை பதிவிட்ட ட்விட்டர் பதிவு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில் போரிங் (Boring) என பதிவிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். 

அவரது பதிவுக்கு பலரும் நகைச்சுவையாகவும், சீரியஸாகவும் பதிலளித்து வருகின்றனர். தொலைக்காட்சி  ஒன்றில் ட்ரம்பின் ஆட்சி குறித்த ஜனநாயக விவாதங்கள் 2020 என்ற விவாத நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாகவே ட்ரம்ப் போரிங் (Boring) என பதிவிட்டுள்ளார். மேலும் விவாதம் நடத்திய தொலைக்காட்சி மீதும் சில விமர்சனங்களை ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.