Milk shake model image
Milk shake model image freepik
உலகம்

அமெரிக்கா: ஆன்லைனில் மில்க் ஷேக் ஆர்டர் செய்தவருக்கு சிறுநீர் டெலிவரி!

Prakash J

இன்று, வீட்டில் இருந்தபடியே பொருட்களை வாங்கும் வசதி பெருகிவிட்டது. நமக்குத் தேவைப்படும் பிடித்தமான பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டால் போதும். அது, அடுத்த சில மணி நேரங்களில் நம் வீட்டிற்கே வந்துவிடும். ஆனால், அதே ஆன்லைன் முறையில் நிறைய குளறுபடிகளும், ஏமாற்று வேலைகளும் நடைபெறுகின்றன. அப்படியான ஒரு சம்பவம்தான் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.

milk shake

அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தைச் சேர்ந்தவர் வூட்ஸ். இவர், அங்குள்ள பிரபலமான ஓர் உணவு டெலிவரி செயலி மூலம் மில்க் ஷேக் ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த சிறிது நேரத்தில் வீட்டுக்கதவை தட்டிய டெலிவரி மேனும் மில்க் ஷேக்ஐ கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார். டெலிவரி செய்யப்பட்ட மில்க் ஷேக்கினை ஸ்ட்ரா பயன்படுத்தி, வூட்ஸ் சிறிதளவு பருகியபோது, அதன் சுவை வித்தியாசமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியுற்றிருக்கிறார். பின்னர், தான் குடித்தது மில்க் ஷேக் அல்ல, சிறுநீர் என்பதைப் புரிந்துகொண்டார்.

இதையும் படிக்க: சரவெடியாய் வெடித்த வேகப்பந்து வீச்சாளர்கள்.. முதல் அணியாக கெத்தாக அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா!

இதனால், கோபத்தின் உச்சிக்கே சென்ற வூட்ஸ், டெலிவரி செய்த நபரை வீட்டுக்கு அழைத்து, நடந்தது குறித்து சற்று கோபமாகவே விவரித்துள்ளார். தனது தவறை ஒப்புக்கொண்ட டெலிவரி மேன், ’தாம் நீண்டநேரமாக டெலிவரி வேலையைச் செய்து வந்ததால், ரெஸ்ட்-ரூம் செல்ல இயலவில்லை. ஆகவே, ஒரு காலியான கப்பில் சிறுநீர் கழித்திருந்தேன். தவறுதலாக, கோப்பையை மாற்றி டெலிவரி செய்துவிட்டேன்’ எனச் சொல்லி மன்னிப்பு கோரியுள்ளார்.

milk shake

ஆனால் கொஞ்சமும் கோபம் தணியாத வூட்ஸ், உணவு டெலிவரி நிறுவனத்துக்கு போன் செய்து நடந்ததை கூறியுள்ளார். உணவு டெலிவரி நிறுவனம், தவறை ஏற்று உணவுக்கான பணத்தில் $18ஐ கொடுத்துள்ளது. மேலும், தவறு செய்த டெலிவரி மேனையும் பணியில் இருந்து நீக்கிவிட்டனர். இதுபோன்ற தவறுகளை எங்கள் நிறுவனம் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என உணவு டெலிவரி நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ’என்னைக் கேட்காமல் ஏன் டிரீம் செய்தாய்?’ - புருவத்தை அலங்காரம் செய்த பெண்ணிற்கு தலாக் கூறிய கணவர்!