உலகம்

அமெரிக்காவில் பயங்கர சூறாவளி - நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம்

ஜா. ஜாக்சன் சிங்

அமெரிக்காவில் சில பகுதிகளை பயங்கர சூறாவளி காற்று நேற்று தாக்கியது.

அமெரிக்காவின் கன்சாஸ் பகுதியில் மணிக்கு சுமார் 150 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது. இதில் அங்குள்ள ஏராளமான வீடுகள் மற்றும் கட்டடங்கள் சேதமடைந்தன.

அதேபோல, ஆண்டோவர் பகுதியை தாக்கிய சூறாவளிக்காற்று காரணமாக, நூற்றுக்கும் மேற்பட்ட கட்டடங்கள் மற்றும் வீடுகள் தரைமட்டமாகின. பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனிடையே குடியிருப்பு பகுதிகளை சூறாவளிக்காற்று தாக்கும் காட்சிகளை அங்கிருந்த மக்கள் தங்களது செல்போனில் படம்பிடித்துள்ளனர்.