உலகம்

அமெரிக்க தேர்தலில் ட்‌ர‌ம்ப் ‌கட்சி படுதோல்வி

webteam

அமெரிக்காவில் நடந்த மாகாணத் தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயக‌க் கட்சி பெரும் வெற்றி பெற்றது. இது அதிபர் ட்ரம்பின் குடியரசுக் ‌கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் வர்ஜீனியா மற்றும் நியூ ஜெர்சி மாகாணங்களுக்கு நடந்த ஆளுநர் தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர். வர்ஜீனியாவில் குடியரசுக் கட்சி வேட்பாளர் எட் ஜில்லெஸ்பியை தோற்கடித்து புதிய ஆளுநராக ஜனநாயகக் கட்சியின் ரால்ஃப் நார்தம் தேர்வாகியுள்ளார். இந்தத் தேர்தலில் திருநங்கை ஒருவரும் மாநிலப் பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‌இதேபோல் நியூஜெர்சியின் புதிய ஆளுநராக ஃபி‌ல் மர்பி தேர்வாகியுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் கிம்‌ குவாடக்னோ தோல்வி அடைந்தார். 
இதேபோன்று நியூயார்க் நகர மேயர் தேர்தலிலும் ஜனநாயக கட்சி வேட்பா‌ளரே மீண்டும்‌ வெற்றிப் பெற்றுள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப்‌ பதவியேற்றப் பி‌ன்னர் முதல் முறையாக நடந்த மாகாணத் தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயக‌க் கட்சிக்கு பெரும் வெற்றி கிடை‌த்துள்ளது. இதனால் அதிபர் ட்ரம்பின் குடியரசுக் ‌கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.