உலகம்

போராட்டத்தின் நடுவே ஆம்புலன்சை அழகாக வழியனுப்பி வைத்த மக்கள் - வீடியோ

போராட்டத்தின் நடுவே ஆம்புலன்சை அழகாக வழியனுப்பி வைத்த மக்கள் - வீடியோ

webteam

ஹாங்காங் நாட்டில் நடைபெறும் கடும் போராட்டத்திற்கு நடுவில் ஆம்புலன்ஸ் ஒன்றிற்கு மக்கள் வழிவிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

ஹாங்காங் நாட்டில் மக்கள் சட்ட மசோதாவிற்கு எதிராக போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் 2 கோடி மக்களுக்கும் மேல் பங்கேற்று வருகின்றனர். இதனால் ஹாங்காங்கிலுள்ள ரயில் நிலையங்கள், பிரதான சாலைகள் உள்ளிட்ட இடங்களில் மக்கள்கூடி போராட்டம் செய்து வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஒருவர் உடல் நலக் குறைவால் மயங்கி விழுந்தார். 

இதனையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்க்க ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அந்த ஆம்புலன்ஸ் செல்வதற்கு அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்கள் வழிவிட்டனர். அவர்கள் அனைவரும் ஒருசில நொடிகளில் வழிவிட்டு அவர்கள் திரும்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு ஆம்புலன்ஸ் செல்ல மக்கள் வழிவிட்டது அனைவரது மனதையும் நெகிழவைத்தது. இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தக் கடும் போராட்டத்திற்கு இடையிலும் மனிதநேயத்துடன் நடந்துக் கொண்ட மக்களை நெட்டிசன்கள் அதிகம் பேர் பாராட்டி வருகின்றனர்.    

முன்னதாக ஹாங்காங் நாட்டில் கொலை, பாலியல் வல்லுறவு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்கும் சட்டத்திருத்தம் ஹாங்காங் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்களிடம் கடும் எதிர்ப்பு நிலவியதையடுத்து ஹாங்காங் நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டமசோதா விவாதிக்கப்படவில்லை. 1997ஆம் ஆண்டு முதல் ஹாங்காங் சீனாவின் கட்டுபாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.