உலகம்

அமேசான் காடுகளையும் விட்டு வைக்காத கொரோனா !

jagadeesh

கொரோனா வைரஸின் பாதிப்பு மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் மட்டுமன்றி அமேசான் காடுகளில் வசிப்போர் வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. யனோமாமி என அழைக்கப்படும் பழங்குடியினத்தவர்கள் அமேசான் காடுகளில் வசிப்பவர்கள். இவர்கள் பெரும்பாலும் வெளியுலகத் தொடர்பு இல்லாதவர்கள்.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா, இவர்களையும் விட்டுவைக்கவில்லை. யனோமாமி இனத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரேசில் வெளியுறவுத்துறை அமைச்சர் லூயிஸ் ஹென்ரிக் மேன்டெட்டா தெரிவித்துள்ளார். தற்போது அந்தச் சிறுவன் Roraima மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உலக அளவில் கொரோனா வைரஸால்‌ உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்குகிற‌து. உயிரிழப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் 16 லட்சத்திற்கும் ‌அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள‌னர்.‌ 95 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இதில் 3 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் அதிமானோர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக‌ இத்தாலியில் 18 ‌ஆயிரத்து 2‌00க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்‌‌ளனர்.