உலகம்

அமோசான் உரிமையாளரின் காஸ்ட்லி எஸ்டேட் ! விலை என்ன ?

அமோசான் உரிமையாளரின் காஸ்ட்லி எஸ்டேட் ! விலை என்ன ?

PT

அமேசான் நிறுவன உரிமையாளர் ஜெஃப் பெஸோஸ். உலகின் பணக்காரர்கள் வரிசையில் அறியப்படும் இவரின் சொத்து மதிப்பு 110 பில்லியன் டாலராக கணக்கிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் சந்தையில் புரட்சி செய்து வரும் இவர் தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அமெரிக்காவை பூர்விகமாகக் கொண்ட இவர் லாஸ் ஏஞ்சல்ஸின் பெவர்லி ஹில்ஸ் நகரில் உள்ள வார்னர் எஸ்டேட்டை சுமார் 165 மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கியுள்ளார். முன்னதாக இதற்கு தொழிலதிபர் மொகுல் டேவிட் கெஃபென் உரிமையாளராக இருந்தார்.

இந்நிலையில் தனது தொழிலை விரிவுபடுத்துவதற்காக ஜெஃப் பெஸோஸ் இதனை வாங்கியிருக்கிறார். இதன் மூலம் அதிக விலைக்கொடுத்து நிலம் வாங்கிய முதல் பணக்காரர் என்றச் சாதனையை படைத்திருக்கிறார்.

இதற்கு முன்னதாக 1960 இல் பாக்ஸ் ஸ்டூடியோ நிறுவனர் லாச்லன் முர்டோச் தி பெவர்லி ஹில் பில்லீஸ் நிகழ்ச்சி நடத்துவதற்காக 150 மில்லியன் டாலர் விலைக் கொடுத்து பெல் ஏர் எஸ்டேட்டை வாங்கியிருந்தார். இதன் மூலம் அதிக விலைக்கொடுத்து எஸ்டேட் வாங்கிய பணக்காரராக அவர் அறியப்பட்டார். தற்போது அவரின் சாதனையை முறியடித்து ஜெஃப் பெஸோஸ் அந்த இடத்தை பிடித்துள்ளார்.