உலகம்

மேலும் 10,000 ஊழியர்களை பணி நீக்க திட்டம்? வரலாற்று சோகத்துக்கு தயாராகிறதா அமேசான்?

webteam

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் 20 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ட்விட்டர், மெட்டா நிறுவனங்களை தொடர்ந்து  இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானும் மிகப்பெரிய அளவில் ஆட்குறைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. லாபம் இல்லாததால் செலவினங்களைக் குறைப்பதற்காக இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை அமேசான் செய்யவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு 10  ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் அமேசான் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது இதன் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 20 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அந்நிறுவனம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை குறிப்பாக அமேசானின் விநியோக மைய ஊழியர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் கார்ப்பரேட் நிர்வாகிகளாக இருக்கும் என்று கூறப்படுகிறது.  

மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானில் 20 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டால் அது அமேசான் வரலாற்றில் மிகப்பெரிய லே ஆஃப் நடவடிக்கையாக இருக்கும். அமேசான் மொத்த ஊழியர்களில் இது 1.3 சதவீதத்தை நெருங்கும் என்று கூறப்படுகிறது. அமேசான் நிறுவனத்தில் தற்போது உலகம் முழுவதும் 1.5 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.