உலகம்

ஊழியர்கள் நலனுக்காக கொரோனா பரிசோதனை ஆய்வகம் - அமேசான் முடிவு

webteam

அமேசான் நிறுவனம், தங்களது ஊழியர்களை கொரோனா தொற்றிடமிருந்து பாதுகாக்க, புதிய ஆய்வகத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.

சிலருக்கு கொரோனா தொடர்பான அறிகுறிகள் தென்படாமலேயே வைரஸ் பரவுவதால் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் முக்கியம் என்றும் அமேசான் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தில் பணியாற்றும் 7 லட்சம் ஊழியர்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுவர் எனத் தெரிவித்துள்ள அமேசான் நிறுவனம், கொரோனா வைரஸ் உறுதி செய்யப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், வைரஸ் தொற்று ஏற்படாதவர்கள் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது. கடந்த மாதம் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்திலுள்ள அமேசான் கிடங்குகளில் பணியாற்றுவது பாதுகாப்பானதாக இல்லை என்றும், வைரஸ் பரவல் வாய்ப்புள்ளதாகவும் கூறி ஏராளமான ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு பணிபுரியும் ஊழியர்களின் வெப்பநிலையைப் பரிசோதித்து அவர்களுக்கு அமேசான் முகக்கவசங்களை விநியோகித்தது.