ஈரான் விமான விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 169 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து உக்ரைன் நாட்டு விமானம் 169 பேருடன் புறப்பட்டுச் சென்றது. புறப்பட்டு சென்ற சற்று நேரத்திலேயே விமானம் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகிய நிலையில், விமானத்தில் பயணம் செய்த 160 பயணிகள், 9 ஊழியர்கள் என அனைவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் - அமெரிக்கா இடையே பதட்டமான சூழல் நிலவி வரும் நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஈரான் அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்திய விமானங்கள் ஈரான், ஈராக் வளைகுடா வான் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.