உலகம்

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நாவல்னி எந்த நேரத்திலும் உயிரிழக்கக்கூடும் - அதிர்ச்சி தகவல்

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நாவல்னி எந்த நேரத்திலும் உயிரிழக்கக்கூடும் - அதிர்ச்சி தகவல்

JustinDurai

ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நாவல்னி எந்த நேரத்திலும் உயிரிழக்கக்கூடும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ரஷ்யா எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நாவல்னி அதிபர் விளாதிமிர் புதினை கடுமையாக விமர்சிப்பவர். பலமுறை அரசுக்கு எதிராக போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளார். கடந்த ஆண்டு நரம்பு மண்டலத்தை தாக்கும் நச்சுத்தன்மை கொண்ட நோவிசோக் என்ற வேதிப்பொருள் தாக்குதலுக்கு ஆளானார். கோமா நிலைக்கு சென்ற அவர்,ஜெர்மனியில் சிகிச்சை பெற்று பின்னர் அங்கிருந்து ரஷ்யா திரும்பினார்.

மாஸ்கோ விமான நிலையத்திலேயே அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார். ரஷ்யா நீதிமன்றம் அவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 வாரங்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் உடல்நிலை மோசமடைந்திருப்பதால் அலெக்சி நாவல்னி எந்த நேரத்திலும் உயிரிழக்கக்கூடும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். உலக நாடுகள் இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.