உலகம்

மறுபடியும் ஏர் ஏசியா விமானத்துக்கு வந்த சோதனை.. 359 பேர் எஸ்கேப்!

webteam

ஆஸ்திரேலியாவில் இருந்து, மலேசியாவுக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானத்தின் மீது பறவை மோதியதால்   விமானம் மீண்டும் ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் பகுதியில் இருந்து, மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்கு ஏர் ஏசியா விமானம் ஒன்று 345 பயணிகள் மற்றும் 14 ஊழியர்களுடன் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் சென்று கொண்டிருந்தபோது, விமானத்தின் வலதுபுற எஞ்சினிலில் எதிர்பாராத விதமாக பறவை ஒன்று மோதியது. இதனால் விமானத்திலிருந்து பலத்த ஓசை எழுந்தது. உடனடியாக சமயோஜிதமாக செயல்பட்ட விமானி, மீண்டும் விமானத்தை அவசர அவசரமாக ஆஸ்திரேலியா விமான நிலையத்தில் தரையிறக்கினார். இதனால், அதிர்ஷ்டவசமாக விமானத்தில் இருந்த 359 பேரும் உயிர் தப்பினர். தொடர்ந்து, தனி விமானம் மூலம் பயணிகள் அனைரும் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சற்று பரபரப்பு நிலவியது. 

கடந்த 2 வாரங்களில், விமானத்தை பறவைகள் தாக்கியிருப்பது இது 2-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.