நன்றாகத் தூங்கிவிட்டதால் விமானத்தில் சிக்கிக் கொண்ட பெண், பார்க்கிங் செய்யப்பட்ட விமானத்தில் இருந்து மீண்ட சம்ப வம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் உள்ள கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்தவர். டிஃபானி ஆதம்ஸ் (Tiffani Adams). இவர் ஜூன் 9 ஆம் தேதி அங்கிருந்து டொரண்டோ நகருக்கு ஏர் கனடா விமானத்தில் சென்றார். விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது டிஃபானிக்கு தூக் கம் வந்தது. கண்களை மூடியவர், நன்றாகத் தூங்கிவிட்டார். விழித்துப் பார்த்தால் விமானம் இருட்டாக இருந்தது. அக்கம் பக்கம் யாருமில்லை. ‘நாம் எங்கே இருக்கிறோம்?’ எனத் தோன்ற, பிறகுதான் அவருக்கு சுய நினைவு வந்திருக்கிறது, விமான த்தில் இருக்கிறோம் என்று. விமானத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்ததால் அவருக்குப் பயம்.
தோழிக்கு போன் செய்து விஷயத்தை சொல்லலாம் என நினைத்த அவர், போனை எடுத்தால் பேட்டரி கடைசி கட்டத்தில் இருந்தது. பீதி அடைந்த அவர், அங்கு எங்காவது சார்ஜர் போட வழியிருக்கிறதா என்று தேடினார். விமானம் இயங்காமல் இருக்கும்போது அதற்கு வாய்ப்பில்லை என்று நினைத்தவர், காக்பிட் அருகே சென்று பார்த்தார். கதவை கஷ்டப்பட்டு திறந்து பார்த்தார். கீழே இறங்க படிக்கட்டுகள் இல்லை. அங்கிருந்து குதிக்கவும் முடியாது. பின்னர் கதவுக்கான வழியில் உட்கார்ந்து விட்டார்
எதிரில் சரக்குகளை, விமானத்துக்கு கொண்டு செல்லும் வாகனம் ஒன்று சென்றது. அதன் ஓட்டுனரை இந்தப் பக்கம் கவனிக்க வைக்க, செல்போனி ல் கடைசியாக இருந்த வெளிச்சத்தை அவரை நோக்கி அங்கும் இங்கும் ஆட்டினார். இதைக் கவனித்த அவர், விமானத்தின் கதவில் காலை தொங்கப்போட்டபடி பெண் ஒருவர் இருப்பதைக் கண்டதும் விரைந்து வந்து ஆதம்ஸை மீட்டுள்ளார்.
இதுபற்றி ஆதம்ஸ் சமூக வலைத்தளத்தில் எழுதியுள்ளார். அதில், ’’இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை. என்னை கவனிக்காமல், பயணிகள் இறங்கியதும் விமான ஊழியர்களும் இறங்கி சென்றுவிட்டனர். அப்போது நான் மோசமான கன வில் இருந்தேன் என்று நினைக்கிறேன். நான் விமானத்தில் சிக்கிக்கொண்டதை அறிந்ததும் என்னையும் எனக்குள் ஏற்பட்ட பீதியை போக்கவும் முயற்சி செய்தேன். சரக்கு வாகன ஓட்டுனரும் அதிர்ச்சி அடைந்தார். ’’எப்படி உங்களை விட்டு விட்டு சென்றார்கள்?’’ என்றார். ’அந்த அதிசயத்தைதான் நானும் நினைத்துக்கொண்டிருக்கிறேன்’ என்றேன்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்துக்கு ஏர் கனடா விமானம் நிறுவனம் மன்னிப்புக் கேட்டுள்ளது.