உலகம்

ஆஸி., வியட்நாம், ஜப்பான் பிரதமர்களுடன் மோடி பேச்சுவார்த்தை

webteam

தாய்லாந்தில் நடந்த கிழக்காசிய உச்சி மாநாட்டுக்கு இடையே ஆஸ்திரேலியா, வியட்நாம் மற்றும் ஜப்பான் நாட்டு பிரதமர்களை தனித்தனியாக சந்தித்து இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

வியட்நாம் பிரதமர் நுயேன் ஜுவான் ஃபுக்கை(ngyuen xuan phuc) சந்தித்த பிரதமர் மோடி, இரு தரப்பு உறவுகள் குறித்து குறிப்பாக பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி சார்ந்த விவாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பு அளிக்கும் வகையிலான விதிகளை காக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தொடர்ந்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனை சந்தித்த பிரதமர் இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரதன்மை, பாதுகாப்பு, வளர்ச்சி குறித்து பேச்சு நடத்தினார். இதே போல் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவையும் சந்தித்து இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.