உலகம்

மலேரியா, டெங்கு, கொரோனா பிடியிலிருந்து மீண்டவரை தாக்கிய ராஜநாக பாம்பு

JustinDurai

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர் இயன் ஜோன்ஸ். இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள பாரம்பரிய கைவினை பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.  இவர் சமீபத்தில் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமானவர் ஆவார். கொரோனாவிற்கு முன்பாக மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்களினாலும் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் இவரை சில தினங்களுக்கு முன்பு கொடிய விஷமிக்க ராஜநாகம் பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜோத்பூர் நகரின் மருத்துவமனையில் இயன் ஜோன்ஸ் அனுமதிக்கப்பட்டார். அங்கு சில நாட்கள் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் தற்போது அவர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

மலேரியா, டெங்கு, கொரோனா, விஷப்பாம்பு கடி.. என பலவிதமான ஆபத்தான நோய்களிலிருந்து உயிர்தப்பிய தனது அப்பா இயன் ஜோன்ஸ் ஒரு போராளி என்று அவருடைய மகன் செப் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.