76 ஆண்டுகளாக ஒலிபரப்பாகி வந்த பிபிசி தமிழோசையின் சிற்றலை வானொலி சேவை நேற்றுடன் நிறுத்தப்பட்டது.
பிபிசி தமிழோசையின் சிற்றலை சேவையை இனி வழங்குவதில்லை என பிபிசி அறிவித்துள்ளது. தொலைக்காட்சி மற்றும் இணையம் போன்ற புதிய ஊடகங்களின் தாக்கத்தால் வானொலி சேவைகள் ஆதரவை இழந்து வருவதே இந்த முடிவுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இலங்கையின் சக்தி எஃப் எம் மூலம் நடத்தப்பட்டு வரும் பிபிசி தமிழின் ஐந்து நிமிட பண்பலை ஒலிபரப்பு தொடரும்; அதில் எந்த மாற்றங்களும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.