2021ஆம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியை மீண்டும் கைப்பற்றியதற்குப் பிறகு, அங்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஆப்கான் அரசின் புதிய சட்டம், தாலிபன்களை 4 பிரிவுகளாக பிரித்துள்ளது. மேலும், இந்தச் சட்டம் அங்கு சீற்றத்தைத் தூண்டியுள்ளது.
2021ஆம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியை மீண்டும் கைப்பற்றியதற்குப் பிறகு, அங்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் தாலிபன்கள் புதிதாக வெளியிட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டம், ஆப்கான் சமூகத்தை கடுமையான வகுப்புகளாகப் பிரிப்பது குறித்து உரிமைக் குழுக்களிடையே சீற்றத்தைத் தூண்டியுள்ளது. நீதிமன்றங்களுக்கான குற்றவியல் நடைமுறைச் சட்டம் என்ற தலைப்பிலான இந்த ஆவணம், ஜனவரி 4 ஆம் தேதி வெளியிடப்பட்டு, மாகாண நீதிமன்றங்களுக்கு செயல்படுத்துவதற்காக அனுப்பப்பட்டது.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான கோஸ்டில், தனது குடும்பத்தைச் சேர்ந்த 13 பேரைக் கொலை செய்த நபரான 13 வயது சிறுவன் பொது இடத்தில் தூக்கிலிடப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு இந்தப் புதிய விதிமுறை வந்துள்ளது. ஆனால், சட்டப்பூர்வ நிலைகளை வேறுபடுத்துவதற்குப் பதிலாக அடிமைத்தனத்தை மறைமுகமாக அங்கீகரிக்க, இந்தச் சட்டம் ’குலாம்’ (அடிமை) என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவாகக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய தாலிபன் சட்டத்தின் பிரிவு 9, ஆப்கானிய சமூகத்தை முல்லாக்கள் அல்லது மதகுருமார்களை குற்றத்திற்கான விசாரணைகளிலிருந்து விடுபடச் செய்கிறது. தவிர, நான்கு வகுப்புகளாகப் பிரிக்கிறது. அதாவது, இந்தச் சட்டத் தொகுப்பு சமூகத்தை நான்கு படிநிலை வகைகளாக வெளிப்படையாகப் பிரிக்கிறது. அவை, மத அறிஞர்கள் ( உலாமாக்கள் ), உயரடுக்கு ( அஷ்ரஃப் அல்லது பிரபுக்கள்), நடுத்தர வர்க்கம் மற்றும் கீழ் வர்க்கம் எனப் பிரிக்கிறது. அதன்படி, அங்கு மத அறிஞர்கள் முதலிடத்தில் உள்ளனர்.
முல்லாக்கள் (மத அறிஞர்கள்) ஏதேனும் குற்றம் செய்தால், அவர்களுக்கு அறிவுரை மட்டுமே வழங்கப்படும் எனவும், அதே நேரத்தில் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் சிறைவாசம் மற்றும் உடல் ரீதியான தண்டனை இரண்டையும் அனுபவிப்பார்கள் என்று கூறப்படுகிறது. தாலிபன்கள் அடிமைத்தனம் போன்ற சட்டப் பிரிவுகளை மீண்டும் உயிர்ப்பித்து வன்முறைக்கு சட்டப்பூர்வ புனிதத்தை அளித்துள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். இதையடுத்தே இந்தச் சட்டம் அங்கு சீற்றத்தைத் தூண்டியுள்ளது. இந்தச் சட்ட விதிகள் சமத்துவம், மனித கண்ணியம் மற்றும் அடிமைத்தனம் மீதான சர்வதேச தடைகள் ஆகியவற்றின் கொள்கைகளுக்கு முரணானவை என ஆப்கானிஸ்தானின் தேசிய எதிர்ப்புக்கான உச்ச கவுன்சில் தெரிவித்துள்ளது.