உலகம்

‘ரீபொக்’ நிறுவனத்தை விற்க அடிடாஸ் முடிவு..!

‘ரீபொக்’ நிறுவனத்தை விற்க அடிடாஸ் முடிவு..!

JustinDurai

15 ஆண்டுகளுக்கு முன்பு 3.8 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கப்பட்ட ‘ரீபோக்’ பிராண்டை விற்க திட்டமிட்டுள்ளதாக அடிடாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த அடிடாஸ் நிறுவனம், விளையாட்டு ஆடை, காலணிகள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் உலகளவில் முன்னணி வகிக்கும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் ‘ரீபோக்’ நிறுவனத்தின் வர்த்தகத்தையும் வைத்துள்ளது. இந்நிலையில் 15 ஆண்டுகளுக்கு முன் சுமார் 3.8 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கப்பட்ட ரீபோக் பிராண்டை விற்க முடிவு செய்துள்ளதாக அடிடாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனையொட்டி நடப்பாண்டின் முதல் காலாண்டில் இருந்து ‘ரீபோக்’ நிறுவனத்தின் வணிகம் நிறுத்தப்பட்டுள்ளதாக முதலீட்டாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதற்கான காரணத்தை அடிடாஸ் நிறுவனம் தெரிவிக்கவில்லை.