உலகம்

800 கோடியை எட்டியது உலக மக்கள்தொகை - 2023 ஆம் ஆண்டில் சீனாவை கடக்கும் இந்தியா!

webteam

உலக மக்கள் தொகை இன்று 800 (8 பில்லியன்) கோடியை எட்டியது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

பொது சுகாதாரம், ஊட்டச்சத்து, தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் மருத்துவம் ஆகியவற்றில் முன்னேற்றம் காரணமாக மனித ஆயுட்காலம் படிப்படியாக அதிகரித்ததே மக்கள் தொகை அதிகரிப்புக்கு காரணம் என்று சர்வதேச அமைப்பு கூறுகிறது. மேலும் சில நாடுகளில் கருவுறுதல் அளவுகள் மேம்பட்டுள்ளதால் மக்கள் தொகை அதிகரிப்பு ஏற்படுவதாகவும் ஐ.நா குறிப்பிட்டுள்ளது.

உலக மக்கள் தொகை 7 பில்லியனில் இருந்து 8 பில்லியனாக மாற 12 ஆண்டுகள் ஆகும் என்றும், அது 9 பில்லியனை எட்டுவதற்கு 2037 வரை சுமார் 15 ஆண்டுகள் ஆகும் என்றும் ஐ.நா கூறியுள்ளது. அதன் சமீபத்திய கணிப்பில், உலக மக்கள் தொகை 2030இல் கிட்டத்தட்ட 8.5 பில்லியனாகவும், 2050 இல் 9.7 பில்லியனாகவும், 2100 இல் 10.4 பில்லியனாகவும் வளரக்கூடும்.

2050ஆம் ஆண்டு வரை உலக மக்கள்தொகையில் பாதிக்கு மேல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் தான்சானியாவில் இதன் தாக்கம் இருக்கும். இந்த மதிப்பீடுகளின்படி, 2023 ஆம் ஆண்டில் இந்தியா சீனாவை கடந்து உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகையில் முன்னோடியில்லாத அதிகரிப்பு குறித்து கருத்து தெரிவித்த ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் ( Antonio Guterres ), "இந்த மைல்கல் என்பது கிரகத்திற்கான மனிதகுலத்தின் பகிரப்பட்ட பொறுப்பைக் கருத்தில் கொண்டு பன்முகத்தன்மை மற்றும் முன்னேற்றங்களைக் கொண்டாடுவதற்கான ஒரு சந்தர்ப்பமாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்