பிரபல மேக்கரீனா பாடலுக்கு சவுதியின் ஜெட்டா நகரின் போக்குவரத்து மிகுந்த சாலையில் நடனமாடிய சிறுவனை காவல்துறையினர் பிடித்துச் சென்றனர். பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் காவல்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்ததாக கூறப்படுகிறது. அந்த சிறுவன் யார்? எந்த நாட்டைச் சேர்ந்தவன் போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. சிறுவன் சாலையில் நடமானடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.