உடலில் தீப்பற்றி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஓட்டுநர் ஒருவரை தன் பர்தா வை கழற்றி காப்பாற்றிய பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிகிறது.
அமீரகத்தில் உள்ள அஜ்மான் நகரின் சாலையில் ட்ரக்குகள் மோதிக் கொண்டதில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் இருந்த ஓட்டுநர் ஒருவர் உடலில் தீப்பற்றி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே தன் தோழியுடன் காரில் சென்றுகொண்டிருந்த ஜவாஹெர் என்ற இளம் பெண், இதைக் கண்டதும் காரை நிறுத்தினார். பின்னர், தனது பர்தா மற்றும் தோழியின் பர்தாவைக் கழற்றி, தீயில் சிக்கிய டிரைவரின் மேல் போட்டு தீயை அணைத்துள்ளார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். காயமடைந்த டிரைவர், இந்தியாவை சேர்ந்த ஹக்ரித் சிங் என்று தெரியவந்துள்ளது.புத்தசாலித்தனமாக, டிரைவரை காப்பாற்றிய ஜவாஹெர்க்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.