உலகம்

‘தகிகோகோச்சி’ : அரிசி பைகளில் பிறந்த குழந்தைகளின் படம்.. அன்பை பகிரும் ஜப்பான் பெற்றோர்

EllusamyKarthik

கொரோனா பெருந்தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. அதனால் பலரும் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில் ஜப்பானில் புதிதாக பிறக்கும் குழந்தைகளின் முகத்தை மட்டுமே படமாக பிடித்து அதை அரிசி பைகளின் மீது வைத்து, தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து வருகின்றனர் புதிதாக பெற்றோர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட தம்பதியர். 

கொரோனா காரணமாக இந்த ஏற்பாடு என அவர்கள் சொல்லி உள்ளனர். 

இது ஜப்பானில் ‘தகிகோகோச்சி’ (Dakigokochi) என்ற பெயரில் பிரபலமடைந்து வருகிறது. இந்த அரிசி பையை பார்ப்பதற்கு ஒரு குழந்தை தனது அம்மாவின் சேலையை கொண்டு தலை தவிர உடல் முழுவதும் போர்த்தப்பட்டுள்ளதை போல உள்ளது. மேலும் இதன் மூலம் சக குடும்பத்தினர் சமூக இடைவெளியுடன் குழந்தையை ஆரத் தழுவி கொஞ்சவும் முடியும் என்கின்றனர் ஜப்பானியர்கள். 

குழந்தையின் உடல் எடைக்கு ஏற்ப இந்த பைகளில் அரிசி நிரப்பப்பட்டு வருவதாகவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகிகோகோச்சி பயணம் தொடங்கி அனைத்தையும் குறைப்பதோடு குழந்தையை நேரில் பார்த்த சுகத்தை கொடுப்பதாக சொல்கின்றனர் அவர்கள்.