உலகம்

ரூ.85 லட்சத்துக்கு ஏலம்... சாதனை படைத்த சூப்பர் மேரியோ கேம்..!

webteam

பிரிக்கப்படாத புத்தம் புது சூப்பர் மேரியோ கேம் பிரதியை ஒருவர் ரூ.85 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளார்

சூப்பர் மேரியோ கேம் மிகவும் புகழ்பெற்ற ஒரு விளையாட்டு. குறிப்பாக 90களில் பிறந்தவர்களின் பிடித்தமான கேம் அது. இன்று செல்போனிலேயே அசலான கிராபிக்ஸ் காட்சிகளுடன் விதவிதமான கேம்கள் வந்துவிட்டாலும் சூப்பர் மேரியோவுக்கு இன்றும் ஒரு மவுசு உண்டு. அதன் இசையும், நகர்வுகளும் என்றும் ரசிக்கக் கூடியவை. இந்நிலையில் 1985ம் ஆண்டு உருவாக்கப்பட்ட Super Mario Brosன் பிரதி ஒன்றை ஒருவர் ஒரு லட்சத்து 14ஆயிரம் டாலர்களுக்கு ஏலம் எடுத்துள்ளார்.

அப்படி என்றால் இந்திய மதிப்பில், ரூ.85 லட்சத்துக்கும் மேல் ஆகும். பிரிக்கப்படாத புத்தும் புது பிரதியை இந்த விலைக்கு ஏலம் எடுத்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள ஏலம் விடுத்தவரும் பத்திரிகையாளருமான க்ரிஷ் கோஹ்லர், பிரிக்கப்படாத Super Mario Brosன் பிரதி ஒன்று ஒரு லட்சத்து 14ஆயிரம் டாலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு தனிப்பட்ட கேம் அதிக விலைக்கு விற்கப்படுதற்கான சாதனையை செய்துள்ளது. இது ஒரு நல்ல நாள் எனத் தெரிவித்துள்ளார்.

10 புள்ளிக்கு 9.4 புள்ளிகளை அந்த பிரதி பெற்றுள்ளது. பிரிக்கப்படாத கவர், பழமை, பிரசித்தி பெற்ற விளையாட்டு என பல சிறப்பம்சங்களால் இது சிறந்த புள்ளியைப் பெற்று நல்ல விலைக்கும் ஏலம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது