அமெரிக்காவின் ஓக்லஹோமா நகரில் ஆறு கால்களுடன் பிறந்த நாய்க்குட்டி ஒன்று உயிர்பிழைத்துள்ளது அதிசயம் என தெரிவித்துள்ளனர் அங்குள்ள கால்நடை மருத்துவர்கள். உலகிலேயே ஆறு கால்களுடன் பிறந்து, உயிருடன் இருப்பது இந்த நாய்க்குட்டியாக இருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Spina bifida என்ற தண்டுவட பாதிப்புடன் இந்த நாய்க்குட்டி பிறந்திருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆறு கால்கள் மட்டுமல்லாது இந்த நாய்க்குட்டிக்கு இரண்டு வால்கள் மற்றும் இரண்டு இனப்பெருக்க உறுப்புகள் இருப்பதாகவும் மருத்துவர்கள் சொல்லியுள்ளனர்.
இந்த நாய்க்குட்டி தற்போது நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.