இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சுமத்ரா தீவின் மேற்கு கடற்கரை பகுதியில் ரிக்டர் அலகில் 6.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. இதனால் வீடுகளிலிருந்து பதறியடித்தபடி வெளியே வந்த மக்கள், வீதிகளில் தஞ்சமடைந்தனர். நடுநடுக்கத்தால் சேதங்கள் ஏற்பட்டதா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா பகுதியிலும் 6.4 ரிக்டரில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
2004ஆம் ஆண்டு டிசம்பரில் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உருவான ஆழிப்பேரலை தமிழக கடற்கரைப் பகுதிகளில் பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியிருந்தது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிக்க: உக்ரைனில் ரஷ்ய படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட அமெரிக்க பத்திரிகையாளர்!