அமெரிக்காவின் சியாட்டில் வசிக்கும் பெண்மணி ஒருவர் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மீண்டு வந்துள்ள கதையைக் கூறியுள்ளார்.
உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 623 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் இந்த நோய் தாக்கத்திற்கு ஆளானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்பால் 3 ஆயிரத்து 169 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவை தாண்டி பல நாடுகளுக்கு இந்த நோய் தொற்று பரவி உள்ளது. அமெரிக்காவிலும் இதன் தாக்கம் பரவியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவிலுள்ள சியாட்டில் வசிக்கும் ஒரு பெண்மணி கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார். இந்த நோய் குறித்து கவலைப்பட்டு வருபவர்களுக்கு மத்தியில் இந்தச் செய்தி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து எலிசபெத் ஷ்னைடர் என்ற அந்த பெண்மணி கூறுகையில், “பீதி அடைய வேண்டாம் ஆனால் அதிக ஆபத்துள்ள நபர்களைப் பற்றி சிந்தித்து, உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் வீட்டிலேயே இருங்கள்” எனக் பேசியுள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள மிகப்பெரிய நகரமான சியாட்டிலில் வசிக்கிறார் எலிசபெத் ஷ்னைடர். இந்தப் பகுதியில் உலகளவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் நோயால் இங்குள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
37 வயதான இவர் பயோ என்ஜினீயரிங் துறையில் பி.எச்.டி பெற்றவர். கொரோனா தொற்றுநோயில் இருந்து மீண்ட தனது சொந்த அனுவவத்தை பகிர்ந்து அவர் கொண்டுள்ளார். “மக்களுக்கு கொஞ்சம் நம்பிக்கையைத் தருவதற்காகதான் என்னுடைய அனுபவர்களை பகிர்ந்து கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார். இந்த நோய் அவரைத் தாக்கிய பிறகு தனியாக வீட்டில் தங்கி தன்னைத் தானே கவனித்து கொண்டு மீண்டுள்ளார் எலிசபெத்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “இது வெளிப்படையாக, முற்றிலும் முரண்பட்டு இருக்க வேண்டிய ஒன்றல்ல; ஏனென்றால் வயதானவர்கள் அல்லது நிறைய பேர் அடிப்படை சுகாதாரத்தை கொண்டவர்களாகவே உள்ளனர். அதாவது, வீட்டிலேயே தங்குவது, மற்றவர்களிடமிருந்து நம்மை தனிமைப்படுத்துவது குறித்து நாம் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்றும் எலிசபெத் அறிவுரை கூறியுள்ளார்.