உலகம்

அமெரிக்கா: விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பயணி... காரணம் இதுதான்

அமெரிக்கா: விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பயணி... காரணம் இதுதான்

EllusamyKarthik

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வித்தியாசமான வகையில், உள்ளாடையை முகக்கவசமாக அணிந்திருந்த காரணத்தினால் பயணி ஒருவர் விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார். கடந்த 2019 இறுதியில் உலகில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது முதலே மக்கள் முகக்கவசம் அணிவது அவசியம் என பல்வேறு உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. 

இந்த நிலையில் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள Fort Lauderdale விமான நிலையத்தில் 38 வயதான ஆடம் என்ற பயணி வித்தியாசமான வகையில் உள்ளாடையை முகக்கவசமாக அணிந்தபடி இருந்துள்ளார். அவர் பயணிக்க இருந்த விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்காத காரணத்திற்காக விமான குழுவினர் அவரிடம் பேசி வெளியேற்றி உள்ளனர்.

“நான் உள்ளாடையை முகக்கவசமாக அணிந்துதான் இதற்கு முன்னதாக விமானத்தில் பயணம் செய்துள்ளேன். இனியும் அப்படிதான் செய்வேன். நான் வெளியேற்றப்பட்டதும் எனக்கு ஆதரவாக சில பயணிகள் வெளியேறினர்” எனத் தெரிவித்துள்ளார் ஆடம். அவர் அணிந்திருந்த உள்ளாடை மாஸ்க் மூக்கு மற்றும் வாய் பகுதியை முழுவதுமாக மூடியபடி இருந்தது. அவரிடம் விமான பயணத்திற்கான கட்டணம் திரும்ப கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.