உலகம்

ஒட்டுநரே இல்லாமல் இயங்கும் பயணிகள் வாகனம்! விரைவில் அறிமுகமாகிறது?

webteam

ஸ்டியரிங்கோ, பெடலோ இல்லாமல் இந்த வாகனம் தன்னிச்சையாக (Automatic) இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

ஓட்டுநரே இல்லாமல் தானாகவே இயங்கும் பயணிகள் வாகனத்தை (Zoox's) ஜூக்ஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது. அமேசான் டாட் காம் நிறுவனத்தின் கீழ் உள்ள ஜூக்ஸ் நிறுவனம், கலிஃபோர்னியாவில் உள்ள தொழிற்சாலையில் இந்த வாகனத்தைத் தயாரித்துள்ளது. மின்சாரத்தில் இயங்கும் இந்த வாகனத்தில், ஒரே நேரத்தில் 4 பேர் அமர்ந்து பயணிக்க முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

விபத்தில்லா பயணத்தை உறுதி செய்யும் வகையில், பாதுகாப்பு உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இந்த ரோபோ வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்டியரிங்கோ, பெடலோ இல்லாமல் இந்த வாகனம் தன்னிச்சையாக (Automatic) இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட அமெரிக்காவில், அந்நாட்டு அரசின் முறையான அனுமதி பெற்ற பிறகு இந்த புதிய வாகனத்தின் அறிமுக நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.