உலகம்

அமெரிக்காவை அடுத்து பிரிட்டனிலும் பரவத் துவங்கிய ஒமைக்ரானின் புதிய வகை திரிபு!

PT

அமெரிக்காவில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரானின் புதிய வகை திரிபு தற்போது பிரிட்டனிலும் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு முகமை, கொரோனா திரிபு தொடர்பான விரிவான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி தொடங்கிய வாரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளில், 3 புள்ளி 3 சதவிகிதம் பேருக்கு BA 4.6 என்ற உருமாற்றம் அடைந்த ஒமைக்ரானின் புதிய திரிபு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வகை திரிபு பல்வேறு உலக நாடுகளிலும் தற்போது அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. BA 4 வகை ஒமைக்ரானில் இருந்து உருமாற்றம் அடைந்ததே BA 4.6 என மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வகை ஒமைக்ரானால் மக்கள் அதிகம் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்