உலகம்

பிரேசில் : பழைய கார் பாகங்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட ஹெலிகாப்டரில் பயணம் செய்த மனிதர்!

EllusamyKarthik

எல்லோருக்கும் வானூர்தியில் பயணிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அப்படிப்பட்ட ஆர்வம் கொண்டவர்தான் பிரேசில் நாட்டை சேர்ந்த Genesis Gomes. இவருக்கு விமானங்களை இயக்குவதில் ஆர்வம் அதிகம் என சொல்லப்படுகிறது. அந்த வகையில் பழைய பயனற்ற கார்களின் பாகங்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட ஹெலிகாப்டரில் பயணம் செய்து அசத்தியுள்ளார் அவர். 

ஹெலிகாப்டரில் அவர் பயணிக்கும் வீடியோ தற்போது உலக அளவில் வைரல் டாக்காக மாறியுள்ளது. 

வோக்ஸ்வேகன் பீட்டல் கார் எஞ்சின், பழைய மோட்டார் சைக்கிள், டிரக் மற்றும் சைக்கிள் பாகங்களை கொண்டு இந்த ஹெலிகாப்டர் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த ஹெலிகாப்டரை அவரது வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்துள்ளாராம் Gomes.

<iframe width="602" height="315" src="https://www.youtube.com/embed/-eIvIr7xGto" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

இந்த ஹெலிகாப்டரை அவர் வடிவமைத்த, அவருடைய சொந்த வாகனமா? என்ற கேள்வி எழுப்பபட்டது. அதற்கு இல்லை என தெரிவித்த அவர், ‘அது எனது நண்பருடையது’ என தெரிவித்துள்ளார்.