உலகம்

விண்மீன் மண்டலத்தில் கேட்ட இதயத்துடிப்பு சத்தம்.. திகைத்துப்போன விஞ்ஞானிகள்!

JustinDurai

விண்மீன் மண்டலத்தில் விசித்திரமான இதயத் துடிப்பு மாதிரியான ஒரு சத்தம் கேட்டதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பொதுவாக, அறிவியலின்படி ஒலியால் வெற்றிடத்தில் பயணிக்க முடியாது. ஏனெனில் ஒலி பரவ மூலக்கூறுகள் அவசியம். இதன் காரணமாகவே விண்வெளியில் ஒருவருக்கு ஒருவர் பேச முடியாது. இந்நிலையில், விண்மீன் மண்டலத்தில் (Galaxy) இருந்து இதயம் துடிப்பது போன்ற ஒரு சத்தம் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருப்பதாக விண்வெளி ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த சத்தமானது ரேடியோ வெடிப்பிலிருந்து வரும் சத்தத்தோடு இணைந்து கேட்பதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னதாக அண்டவெளியில் 'ஹம்' என்ற சத்தம் கேட்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அண்மையில் வெளியான ஆய்வு ஒன்றில் பூமியில் இருந்து கிட்டத்தட்ட 3 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில், அண்டத்தின் மற்றொரு விண்மீன் மண்டலத்திலிருந்து வரும் விசித்திரமான ரேடியோ சிக்னல் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாம்: கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியதாக இலங்கை சபாநாயகர் அதிகாரபூர்வ அறிவிப்பு