உலகம்

அமெரிக்கா: நண்டுகளை வேகமாக உண்ணும் வேடிக்கையான போட்டி

அமெரிக்கா: நண்டுகளை வேகமாக உண்ணும் வேடிக்கையான போட்டி

JustinDurai
அமெரிக்காவில் நண்டுகளை வேகமாக உண்ணும் வேடிக்கையான போட்டி நடத்தப்பட்டது.
ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள FLORIDA KEYS தீவில் மீன் விற்பனையாளர்களால் நடத்தப்பட்ட விழா ஒன்றில், நண்டுகளை உண்ணும் போட்டி நடத்தப்பட்டது. தலா 25 நண்டுகளுடன் நண்டுகளின் ஓட்டை உடைப்பதற்கான சிறிய இரும்பு சாதனம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. மணி ஒலித்ததும் போட்டியாளர் நண்டுகளின் ஓட்டை உடைத்து உண்ணத் தொடங்கினர். 14 நிமிடங்கள் 29 விநாடிகளில் 25 நண்டுகளை சாப்பிட்ட, 55 வயதான ஜூவான் மல்லான் வெற்றி பெற்றார்.