உலகம்

உக்ரைனில் அதிபரான காமெடி நடிகர்!

உக்ரைனில் அதிபரான காமெடி நடிகர்!

webteam

உக்ரைன் நாட்டில், டி.வி. தொடரில் அதிபராக நடித்த காமெடி நடிகர் நிஜத்திலும் அதிபரானார்.

உக்ரைனில் அதிபராக இருந்தவர் போரோஷென்கோ (Poroshenko). இவரது பதவி காலம் அடுத்த மாதம் முடிவடைவதை அடுத்து, அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் அவர் மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து டி.வி.தொடரில் அதிபராக நடித்த, அரசியல் அனுபவம் இல்லாத காமெடி நடிகர் வோலோதிமிர் ஜெலன்ஸ்கி  (41) (Volodymyr Zelensky) போட்டியிட்டார். 

காமெடி நடிகரான ஜெலென்ஸ்கி, 'Servant of the People' என்ற டிவி தொடரில் நடித்தவர். நாட்டில் நடக்கும் ஊழலை விமர்சித்து, ஜெலென்ஸ்கி பேசும் வீடியோ வைரலாகி அதன் மூலம் அவர் நாட்டின் அதிபர் ஆவது போல் இந்த தொடரின் கதை அமைக்கப் பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் 31 ஆம் தேதி நடந்த முதற்கட்ட வாக்குப் பதிவில் பொரஷென்கோவை விட, ஜெலன்ஸ்கி 70 சதவீதம் அதிக வாக்குகள் முன்னிலை பெற்றார். நேற்று முன்தினம் இரண்டாம் கட்ட தேர்தல் நடந்து முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ஜெலன்ஸ்கி அமோக வெற்றிப்பெற்றார்.