அல்-கொய்தா ஆதரவு அமைப்பு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் விமானங்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்த அழைப்பு விடுத்துள்ளது. 9/11 தாக்குதலை நினைவுபடுத்தும் இந்த அறிவிப்பு, சமீபத்திய flydubai சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது. Telegram சேனல்களில் பகிரப்பட்ட இந்தப் பதிவுகள் பின்னர் நீக்கப்பட்டன.
செய்தியாளர் - M.மீரா
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலைச் சேர்ந்த விமானங்களை குறிவைத்து, ‘செப்டம்பர் 11 அன்று நடந்த தாக்குதலை போல தாக்குதல்களை நடத்த வேண்டும் என அல்-கொய்தா ஆதரவு அமைப்பு ஒன்று அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 11 தாக்குதலைக் குறிப்பிட்டு வெளியான இந்தப் பதிவு, சமீபத்தில் நடந்ததாக கூறப்படும் flydubai விமான சம்பவத்துடனும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.
‘The New York Post வெளியிட்ட தகவலில், அல்-கொய்தா ஆதரவாளர்களால் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்ட அல்-பயான் என்ற அமைப்பு விமானங்களை குறிவைக்க அழைப்பு விடுத்துள்ளது.
இந்த அமைப்பு போர் இன்னும் முடியவில்லை என்றும், அமெரிக்கர்கள், இஸ்ரேலியர்கள் உள்ளிட்டவர்களை ஏற்றிச் செல்லும் விமானங்களை குறிவைக்க முடியும் என்றும் . செப்டம்பர் 11 தாக்குதலை போல நடத்திக் காட்டலாம் என்றும் கூறியுள்ளதாக தெரிகிறது.
மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியர்களுக்கு முன்பைவிட தற்போது அதிக எதிரிகள் உள்ளனர் என்றும், அமெரிக்காவின் ஆதிக்கம் ஒரு நாள் முடிவுக்கு வரும் என்றும் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பதிவு சனிக்கிழமை அல்-கொய்தாவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் Telegram சேனல்களில் பகிரப்பட்டதாகவும், பின்னர் அந்தப் பதிவு நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் சமீபத்தில் நடந்த flydubai FZ1073 விமான சம்பவத்துக்குப் பிறகு மேலும் கவனம் பெற்றுள்ளது. அந்த விமானத்தை கைப்பற்ற முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கைது செய்யப்பட்டிருந்த நேரத்தில், அவரது Instagram மற்றும் LinkedIn கணக்குகளில் அல்-கொய்தா தலைவர்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சில பதிவுகள் வெளியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில் விமானத்தின் cockpit-க்குள் எடுக்கப்பட்ட காட்சிகளும், அருகில் பறந்த இஸ்ரேல் விமானங்களை காட்டும் காட்சிகளும் இருந்ததாக கூறப்படுகிறது. அல்-கொய்தா முன்னாள் தலைவர் அய்மன் அல்-சவாஹிரி உள்ளிட்டோரின் புகைப்படங்களும் அந்தப் பதிவுகளில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மக்கா, மதீனா மற்றும் ஜெருசலேம் ஆகிய இடங்களை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட AI படம் ஒன்றும் பதிவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், இந்தப் பதிவுகளை உண்மையில் யார் வெளியிட்டார்கள் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அவை முன்கூட்டியே திட்டமிட்டு வெளியிடப்பட்டதா என்பதும் தெரியவில்லை.