உலகம்

வுகான் நகரில் தொற்றிலிருந்து மீண்ட 90% மக்களுக்கு நுரையீரல் பாதிப்பு: ஆய்வில் தகவல்

webteam

சீனாவின் வுகான் நகரில் கொரோனாத் தொற்றிலிருந்து மீண்ட 90 சதவீத மக்களுக்கு நுரையீரல் பாதிப்பு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

சீனாவின் வுகான் பல்கலைகழகத்தில் உள்ள ஜாங்னான் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவு இயக்குனரான பெங் ஜியோங் அவர்களின் தலைமையிலான மருத்துவக்குழு கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து கொரோனாவிலிருந்து குணமான 59 வயதிற்கு உட்பட்ட 100 நபர்களை ஆய்வுக்கு உட்படுத்தியது. இந்த ஆய்வில் அவர்களில் 90 சதவீத மக்களுக்கு நுரையீரல் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் நுரையீரலில் நடக்கும் சுவாசப் பரிமாற்றங்கள் நல்ல உடல்நிலையில் உள்ள ஒரு நபரின் செயல் திறனை விட மிகக் குறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது.

இது மட்டுமன்றி அவர்களை 6 நிமிடம் நடக்க வைத்ததில் அவர்களால் 400 மீட்டருக்கு மேல் நடக்க இயலவில்லை என்பதும் ஆனால் நல்ல உடல்நிலையில் உள்ள ஒரு நபரால் அதே 6 நிமிடத்தில் 500 மீட்டர் தூரத்தைக் கடக்க முடிந்தது என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.