ரஷ்யாவில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில் 8 மாத புலி ஒன்று பாடுவது போன்று குரல் எழுப்புவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பர்னால் என்ற ஊரில் உள்ள விலங்கியல் பூங்காவில் ஷெர்ஹான் என்ற 8 மாத புலி உள்ளது. வழக்கமாக பார்வையாளர்களை கண்டால் உறும வேண்டிய இப்புலி பாடுவது போன்று குரல் எழுப்பி வருகிறது. வித்தியாசமான இப்புலியை காண ஏராளமான மக்கள் இப்பூங்காவிற்கு வருகின்றனர். இந்த குட்டிப்புலி பிறந்ததில் இருந்தே இது போன்று குரல் எழுப்பி வருவதாக பூங்கா பணியாளர்கள் தெரிவித்தனர்.